Advertisement


பெண்கள் சாதிக்க வேண்டும்: ‘தங்கமங்கை’ பவானி பேச்சு

டிசம்பர் 04, 2018.
 Comments  
 


Bhavani Devi, india
 

வேலுார்: ‘‘விளையாட்டில் பெண்கள் சாதிக்க குடும்பமும், சமுதாயமும் ஒத்துழைக்க வேண்டும்,’’ என காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி பேசினார்.

தென் மண்டல பல்கலைக்கிடையே மகளிர் இறகுப்பந்து போட்டி வேலுார் வி.ஐ.டி.,யில் நேற்று துவங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து 82 பல்கலை அணிகளைச் சேர்ந்த 400 பேர்  பங்கேற்றனர். முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் வி.ஐ.டி.,யில் வரும் 10 முதல் 13 வரை நடக்கவுள்ள அகில இந்திய போட்டியில் பங்கேற்க தகுதிபெறும்.

சிட்னியில் நடந்த காமன்வெல்த்தில், வாள் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தின் பவானி தேவி, அமைதி புறாக்களை பறக்க விட்டு, பேசியதாவது: விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் பெண்கள் பங்கேற்று சாதிக்க அவர்களது குடும்பம், சமுதாயம் ஒத்துழைக்க வேண்டும். நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தீவிர பயிற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். விளையாட்டுக்கு அரசு நிதியும், பயிற்சியும் அளிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?