Advertisement


உலக ஹாக்கி: காலிறுதியில் ஆஸி., * இங்கிலாந்தை வீழ்த்தியது

டிசம்பர் 04, 2018.
 Comments  
 


world cup hockey australia beat england
 

 புவனேஸ்வர்: உலக ஹாக்கி தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலிய அணி.

இந்தியாவில் 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதிக்கு செல்லும்.

நேற்று ‘பி’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் ‘நம்பர்–1’ ஆக உள்ள ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலிய அணி, 7வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை சந்தித்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் போக 0–0 என சமனில் முடிந்தது.

இதன் பின் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எழுச்சி பெற்றனர். போட்டியின் 47வது நிமிடத்தில் ஜேக் வெட்டன், ஒரு பீல்டு கோல் அடித்து அசத்தினார். அடுத்த மூன்றாவது நிமிடம் பிளேக் ஹோவர்ஸ் (50 வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க ஆஸ்திரேலிய அணி 2–0 என முன்னிலை பெற்றது.

போட்டி முடிய நான்கு நிமிடங்கள் இருந்த போது கோரே வெயர் (56வது) ஒரு கோல் அடித்தார். இதற்கு இங்கிலாந்து தரப்பில் கடைசி வரை பதிலடி தர முடியவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை உறுதி செய்து காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?