Advertisement


சிறந்த கால்பந்து வீரர் லுகா மாட்ரிச் * ரொனால்டோவை பின் தள்ளினார்

டிசம்பர் 04, 2018.
 Comments  
 


Cristiano Ronaldo, Lionel Messi Ballon d Or over as Luka Modric winner
 

பாரிஸ்: சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ விருதை தட்டிச் சென்றார் குரோஷிய அணி கேப்டன் லுகா மாட்ரிச். கடந்த 10 ஆண்டுகளாக நீடித்த மெஸ்சி, ரொனால்டோ ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் சிறந்த ஐரோப்பிய வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ விருது 1956 முதல் வழங்கப்பட்டது. 1995 முதல் ஐரோப்பிய கிளப் போட்டிகளில் பங்கேற்ற மற்ற அணி வீரர்களுக்கும் தரப்பட்டது. 2007 முதல் உலகளவில் மாறியது.

2010 முதல் 2015 வரை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) இணைந்து விருது வழங்கினர். ஒப்பந்தம் முடிந்த நிலையில் 2016 முதல் பிரான்ஸ் தனியாக ‘பாலன் டி ஆர்’ (தங்க பந்து) விருது தருகிறது.

இந்த ஆண்டுக்கான ‘டாப்–10’ பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), மெஸ்சி (அர்ஜென்டினா), உலக கோப்பை தொடரில் அசத்திய மபே (பிரான்ஸ்), லுகா மாட்ரிச் (குரோஷியா) உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

உலக கால்பந்து அணிகள் கேப்டன்கள், முன்னணி பத்திரிகையாளர்கள் ஓட்டு அளித்து சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுவார். குரோஷிய அணி உலக கோப்பை பைனலுக்கு முன்னேற உதவிய கேப்டன் லுகா மாட்ரிச், 33, மொத்தம் 753 புள்ளிகள் பெற்று ‘பாலன் டி ஆர்’ விருதை தட்டிச் சென்றார். ஏற்கனவே உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு பெற்றிருந்தார்.

கடந்த 2008 முதல் தலா ஐந்து முறை இவ்விருது வென்ற ரொனால்டோ (2008, 2013–14, 2016–17), மெஸ்சிக்கு (2009–12, 2015) இம்முறை இரண்டு, ஐந்தாவது இடம் மட்டும் தான் கிடைத்தது. 

முதன் முறையாக வழங்கப்பட்ட சிறந்த வீராங்கனை விருதை நார்வேயின் அடா ஹெஜர்பெர்க், 23, தட்டிச் சென்றார். 21 வயதுக்குட்பட்ட வீரர்களில் சிறந்தவராக பிரான்சின் மபே தேர்வானார்.

முதல் வீரர்

கடந்த 2007ல் பிரேசில் வீரர் காகா ‘பாலன் டி ஆர்’ விருது பெற்றார். இதன் பின் தொடர்ந்து 10 ஆண்டுகள் மெஸ்சி, ரொனால்டோவுக்கு தான் இவ்விருது கிடைத்தது. 10 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக மாட்ரிச் இவ்விருது வென்றார். தவிர இப்பெருமை பெற்ற முதல் குரோஷிய வீரர் இவர் தான்.

* பாபி சார்ல்டன் (1996, இங்கிலாந்து), ஜோகன் கிரப் (1974, நெதர்லாந்து), பாலோ ரோசிக்குப் (1982, இத்தாலி) பின், உலக கோப்பை மற்றும் சிறந்த வீரர் விருதை ஒரே ஆண்டில் தட்டிச் சென்ற நான்காவது வீரர் ஆனார் மாட்ரிச்.

சர்ச்சை

‘பாலன் டி ஆர்’ விருதுக்கு மாட்ரிச் தேர்வு செய்யப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ரொனால்டோ (இந்த சீசனில் 154 கோல்), மெஸ்சியை (148 கோல்) விட மாட்ரிச் (3 கோல்) சிறந்தவரா என கால்பந்து உலகத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?