Advertisement


புதுச்சேரியில் தென்னிந்திய கால்பந்து

டிசம்பர் 03, 2018.
 Comments  
 


Puducherry, South Indian Football
 

புதுச்சேரி: தென்னிந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கால்பந்து போட்டி, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடக்கிறது.

அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் சார்பில், தென்னிந்திய பல்கலை கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கால்பந்து போட்டி, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ராஜிவ்காந்தி விளையாட்டு வளாகத்தில் நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை நடக்கும் இதில், 98 அணிகள் பங்கேற்கின்றன.

துவக்க விழாவில், பல்கலைக்கழக விளையாட்டு துறை இயக்குனர் சுல்தானா வரவேற்றார். துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சிறப்புரையாற்றி, பலுான்களை பறக்கவிட்டு, போட்டியை துவக்கி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 

இந்திய பெண்கள் கால்பந்து வீராங்கனை இந்துமதி கதிரேசன், உடற்கல்வி துறை தலைவர் சுப்ரமணியம், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் ஆட்டத்தில், கோவை அமிர்தா பல்கலைக்கழக அணியும், ஆந்திரா பல்கலைக்கழக அணியும் மோதின.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?