Advertisement


உலக ஹாக்கி ஒளிபரப்பில் சாதனை

டிசம்பர் 02, 2018.
 Comments  
 


World Cup Hockey, Live Telecast, Records
 

புவனேஸ்வர்: இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் 194 நாடுகளில் ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கி உள்ள இந்தியாவுடன் தென் ஆப்ரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட அணிகளும் பங்கேற்று வருகின்றன. இதை பார்க்க மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். 

போட்டிகள் மொத்தம் 194 நாடுகளில் ‘டிவி’யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ‘சேனல்’ ஒளிபரப்புகிறது. இதன் மூலம், உலக கோப்பை ஹாக்கி அரங்கில் முதல் முறையாக அதிக நாடுகளில் ஔிபரப்பு செய்யப்படும் தொடர் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த முறையுடன் (2014, நெதர்லாந்து) ஒப்பிடும்போது இது 150 சதவீதம் அதிகம். இத்தொடரில் பங்கேற்காத வங்கதேசம், உருகுவே, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் கூட போட்டிகளை ரசிகர்கள் ‘டிவி’யில் கண்டுகளிக்கின்றனர்.

இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைமை செயல் அதிகாரி தியாரி வெய்ல் கூறுகையில்,‘‘ ஹாக்கி போட்டியை உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டு செல்வதுதான் எங்களின் நோக்கம். இம்முறை, எங்களின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. புவனேஸ்வரில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை மொத்தம் 194 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த சாதனையை எண்ணி பெருமை கொள்கிறோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?