Advertisement


உலக ஹாக்கி: கனடா–தென் ஆப்ரிக்கா ‘டிரா’

டிசம்பர் 02, 2018.
 Comments  
 


World Cup Hockey, Canada, South Africa
 

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி தொடரில் கனடா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஆண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.

இதன் ‘சி’ பிரிவு லீக் போட்டியில் கனடா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்ததால், முதல் வெற்றியை நோக்கி களமிறங்கின. முதல் 30 நிமிட முடிவில் போட்டி 0–0 என சமநிலையில் இருந்தது. பின் எழுச்சி கண்ட தென் ஆப்ரிக்க அணிக்கு 43வது நிமிடத்தில் நெடுலி முதல் கோலடித்தார். இதற்கு, 45வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பில் கனடாவின் ஸ்காட் டுப்பர் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?