Advertisement


வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி

டிசம்பர் 02, 2018.
 Comments [1]  
 


Mehidy Hasan, bangladesh team
 

தாகா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மெகிதி ‘சுழலில்’ அசத்த வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

வங்கதேசம் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. இரண்டாவது போட்டி தாகாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 508 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஹெட்மயர் (32), டவ்ரிச் (17) அவுட்டாகாமல் இருந்தனர். 

மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. மெகிதி ‘சுழல்’ ஜாலம் காட்டினார். இவரது பந்துவீச்சில் ஹெட்மயர் (39), பிஷூ (37), டவ்ரிச் (37) சிக்கினர். லீவிஸ் டக் அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகிதி ஹசன் 7 விக்கெட் வீழ்த்தினார்.

மிரட்டிய மெகிதி

முதல் இன்னிங்சில் 397 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம் ‘பாலோ ஆன்’ தந்தது. வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. மீண்டும் சுழற்பந்துவீச்சாளர்கள் தொல்லை தந்தனர். கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் (1) சரிவை துவக்கினார். மெகிதி பந்துவீச்சில் பாவெல் (6), ஹோப் (25) ஆட்டமிழந்தனர். தஜுல் ‘சுழலில்’ அம்ப்ரிஸ் (4), சேஸ் (3) அவுட்டாகினர். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் ஹெட்மயர் (93) மட்டும் அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகிதி 5 விக்கெட் கைப்பற்றினார். 

இதன் மூலம், வங்கதேசம் அணி 2–0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் 4வது முறையாக தொடரை வென்றது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
பூபாலன் ஸ்ரீநிவாசன் one week ago | Report abuse
அருமை வங்க தேசத்திடம் மேற்கு இந்திய தீவுகள் தோற்றதே இதுவே முதல் தடவையாக இருக்கும் அருமை




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?