Advertisement


கால்பந்து: சென்னை ‘டிரா’

டிசம்பர் 01, 2018.
 Comments  
 


i league football, chennai city, mohan bhagan
 

 கோல்கட்டா: மோகன் பகான் அணிக்கு எதிரான ஐ–லீக் தொடர் போட்டியில் நெஸ்டர் கார்டில்லோ அடித்த கோல் கைகொடுக்க, சென்னை சிட்டி அணி 1–1 என்ற கணக்கில் போட்டியை ‘டிரா’ செய்தது.

இந்தியாவின் முன்னணி கால்பந்து தொடர் ஐ–லீக். நேற்று கோல்கட்டாவில் நடந்த தனது 7வது லீக் போட்டியில் சென்னை சிட்டி அணி, வலிமையான மோகன் பகானை சந்தித்தது. முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதி துவங்கிய 5வது நிமிடம் மோகன் பகான் வீரர் சோனி நார்டே ஒரு கோல் அடித்தார். இந்த சீசனில் தொடர்ந்து தோற்காமல் வலம் வரும் சென்னை சிட்டி அணிக்கு போட்டியின் 82வது நிமிடம் நெஸ்டர் கார்டில்லோ (ஸ்பெயின்) ஒரு கோல் அடித்து உதவினார். இத்தொடரில் இவர் அடித்த நான்காவது கோல் இது. முடிவில் போட்டி 1–1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.

இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 ‘டிரா’ என 17 புள்ளிகள் பெற்று சென்னை சிட்டி அணி தொடர்ந்து பட்டியலில் ‘நம்பர்–1’ ஆக உள்ளது. அடுத்த மூன்று இடங்களில் சர்ச்சில் பிரதர்ஸ் (10), கேரளா (9), மோகன் பகான் (9) அணிகள் உள்ளன.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் மினர்வா பஞ்சாப், இந்தியன் ஆரோஸ் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 74வது நிமிடம் நிஜோகு (பஞ்சாப்) ஒரு கோல் அடித்தார். முடிவில் 1–0 என பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?