Advertisement


பைனலில் லக்சயா சென்

டிசம்பர் 01, 2018.
 Comments  
 


Tata Open India International Challenge Badminton,  Lakshya Sen,  Ashmita Chaliha, Vrushali
 

மும்பை: ‘டாடா ஓபன் இந்தியா’ சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறினார்.

மும்பையில், ‘டாடா ஓபன் இந்தியா’ சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்தின் கன்டாவத் லீலாவெசாபுத் மோதினர். முதல் செட்டை 17–21 என இழந்த லக்சயா சென், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21–9 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 21–12 எனக் கைப்பற்றினார்.

மொத்தம் 50 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 17–21, 21–9, 21–12 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா 21–19, 21–19 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் சனான்சிதா ஜுசாரோயனை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் விருஷாலி 21–11, 21–12 என, சகவீராங்கனை முக்தா அக்ரேயை தோற்கடித்தார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபர்னா பாலன், ஸ்ருதி ஜோடி 21–16, 8–21, 11–21 என, ஹாங்காங்கின் விங் யுங், இயுங் நிகா டிங் ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?