Advertisement


ரஞ்சி: தமிழக அணி ஏமாற்றம்

டிசம்பர் 01, 2018.
 Comments  
 


Ranji Trophy Cricket, Tamil Nadu, Bengal, Natarajan
 

சென்னை: பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ரஞ்சி கோப்பை தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், பெங்கால் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 263, பெங்கால் 189 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 141 ரன்களுக்கு சுருண்டது. பின், 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய பெங்கால் அணி, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது. மனோஜ் திவாரி (13), ஆமிர் கானி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பெங்கால் அணிக்கு நடராஜன் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ கேப்டன் மனோஜ் திவாரி (18), ஆமிர் கானி (25) அவுட்டாகினர். ராஹில் ஷா ‘சுழலில்’ மஜும்தார் (7), விரித்திக் சாட்டர்ஜீ (0), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (9) சிக்கினர். பொறுப்பாக ஆடிய சுதிப் சாட்டர்ஜீ (40) நம்பிக்கை தந்தார்.

வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது டிண்டா (1) ‘ரன்–அவுட்டாக’ திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் நடராஜன் பந்தில் பிரதிப்தா பிராமனிக் ஒரு ரன் எடுக்க, 2வது இன்னிங்சில் பெங்கால் அணி 9 விக்கெட்டுக்கு 216 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிராமனிக் (25) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் ராஹில் ஷா 5 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?