Advertisement


சென்னை இரண்டாவது ‘டிரா’

நவம்பர் 29, 2018.
 Comments  
 


indian soccer league, chennai fc, kerala
 

 சென்னை: சென்னை, கேரளா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, கோல்கட்டா, பெங்களூரு உட்பட 10 அணிகள் மோதுகின்றன. பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. இதுவரை மோதிய 8 போட்டிகளில் 6ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டியை ‘டிரா’ செய்த சென்னை, புனேயை மட்டும் வென்றது. 

9வது லீக் போட்டியில் சொந்தமண்ணில் களமிறங்கிய சென்னை அணி, கேரளாவை சந்தித்தது. போட்டியின் 3வது நிமிடத்தில் சென்னை அணியின் ஐசக் அடித்த பந்து கோல் போஸ்ட்டுக்கு வெளியே சென்றது. 16வது நிமிடம் எலி சபியா தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது. 

30வது நிமிடத்தில் தோய் சிங் அடித்த பந்தை, கேரளா கோல் கீப்பர் தீரஜ் சிங் அசத்தலாக தடுக்க, கோல் வாய்ப்பு நழுவியது. அடுத்த 3வது நிமிடத்தில் ஜீஜே கொடுத்த ‘பாசை’ பெற்ற தோய் சிங், எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட, முதல் பாதி 0–0 என சமனில் முடிந்தது. 

இரண்டாவது பாதியிலும் சென்னை வீரர்கள் சொதப்பினர். 

வாய்ப்பை பயன்படுத்திய கேரள வீரர்கள் தங்கள் பங்கிற்கு கோல் அடிக்க முயற்சித்தனர். இதற்கு சென்னை கோல் கீப்பர் சஞ்சிபன் கோஷ் அரணாக இருந்து தடை போட்டார். முடிவில் இரு அணிகளும் கடைசி வரை கோல் அடிக்காமல் போக, போட்டி ‘டிரா’ (0–0) ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?