Advertisement


தமிழக அணி ‘டிரா’: கூச் பெகார் டிராபியில்

நவம்பர் 29, 2018.
 Comments  
 


Cooch Behar Trophy, Cricket, Tamil Nadu, Himachal Pradesh, Sonu Yadav
 

நத்தம்: தமிழகம், ஹிமாச்சல பிரதேசம் அணிகள் மோதிய கூச் பெகார் டிராபி லீக் போட்டி ‘டிரா’ ஆனது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த கூச் பெகார் டிராபி (19 வயது) கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் தமிழகம், ஹிமாச்சல பிரதேசம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 489, ஹிமாச்சல பிரதேசம் 200 ரன்கள் எடுத்தன. ‘பாலோ–ஆன்’ பெற்ற ஹிமாச்சல பிரதேச அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. சரண் (3), தீபிந்தர் சிங் ராணா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக துவங்கியது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஹிமாச்சல பிரதேச அணியின் தீபிந்தர் சிங் ராணா, சரண் ஜோடி தமிழக பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய தீபிந்தர் சிங் அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்த போது தீபிந்தர் சிங் (60) அவுட்டானார். அபாரமாக ஆடிய சரண் சதமடித்தார்.

கடைசி நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் ஹிமாச்சல பிரதேச அணி 6 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. சரண் (102), ஹிமான்ஷு பெக் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் பார்கவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து இப்போட்டி ‘டிரா’ என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் சோனு யாதவ் தலைமையிலான தமிழக அணிக்கு 3 புள்ளி வழங்கப்பட்டது. ஹிமாச்சல பிரதேச அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?