Advertisement


ரஞ்சி: சிக்கலில் தமிழகம் * பவுலர்கள் கையில் வெற்றி

நவம்பர் 29, 2018.
 Comments  
 


Mohammad, tamil nadu, ranji trophy
 

சென்னை: ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் வெற்றிக்கு முயற்சிக்கலாம். 

இந்தியாவில் ரஞ்சி கோப்பை உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னையில் நடக்கும் ‘எலைட் பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், பெங்கால் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் தமிழக அணி 263 ரன்கள், பெங்கால் அணி 189 ரன்கள் எடுத்தது. தமிழக அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தமிழக அணியின் ‘நைட் வாட்ச்மேன்’ சாய் கிஷோர் 18 ரன்னுக்கு அவுட்டானார். பாபா இந்திரஜித் 21 ரன்கள் எடுக்க, கேப்டன் பாபா அபராஜித் 4 ரன்னுக்கு வெளியேறி ‘ஷாக்’ கொடுத்தார். அனிருத் ‘டக்’ அவுட்டானார். 

கவுஷிக் (10) கைவிட, ஜெகதீசன் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்னுக்கு சுருண்டது. முகமது (23) அவுட்டாகாமல் இருந்தார். பெங்கால் அணியின் சுழல் வீரர் ரித்திக் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

அபிஷேக் வேகம்

இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்கால் அணிக்கு அபிஷேக் (53 ரன், 58 பந்து) வேகமாக ரன்கள் சேர்த்தார். மூன்றாவது நாள் முடிவில் பெங்கால் அணி 2 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 

இன்று கடைசி நாள், கைவசம் 8 விக்கெட்டுகள் வைத்துள்ள பெங்கால் அணி வெற்றிக்கு 129 ரன்கள் மட்டுமே தேவை. ராகில் ஷா, முகமது உள்ளிட்ட தமிழக பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு விரைவில் விக்கெட் சாய்த்தால் வெற்றிக்கு முயற்சிக்கலாம். 

மும்பை திணறல்

மற்றொரு போட்டியில் மும்பை (297/10), குஜராத் (281/10) அணிகள் மோதுகின்றன. இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி, மூன்றாவது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து, 172 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?