Advertisement


செரினா தந்த பரிசு: கர்மான் உற்சாகம்

நவம்பர் 28, 2018.
 Comments  
 


Karman Kaur Thandi, tennis
 

புதுடில்லி: அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் தந்த ‘ராக்கெட்டை’ பாதுகாப்பாக வைத்துள்ளார் கர்மான். 

இந்திய அணியின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் கர்மான் கவுர் தண்டி, 20. சமீபத்தில் சக வீராங்கனை அன்கிதாவுடன் இணைந்து சீன தைபே ஓபன் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்றார். இது குறித்து கர்மான் கூறியது: டபிள்யு.டி.ஏ., தொடரில் (சீன தைபே) முதல் கோப்பை வென்றது மகிழ்ச்சி. எனக்கும் அன்கிதாவுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. கிராண்ட்ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றுவதுதான் இலக்கு. பின், தரவரிசையில் 150 இடத்திற்குள் இடம் பிடிக்க வேண்டும். 

மறக்க முடியாது

இரட்டையர் பிரிவில் பங்கேற்றாலும், எனது கவனம் முழுவதும் ஒற்றையரில் மட்டுமே உள்ளது. 2014ல் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான டபிள்யு.டி.ஏ., எதிர்கால நட்சத்திரத்திற்கான தொடரில் பங்கேற்றேன். இதற்கான அட்டவணை வெளியீட்டு விழாவில், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினாவை சந்தித்தேன். அப்போது, இவரது கையெழுத்திட்ட டென்னிஸ் ராக்கெட்டை பரிசாக வழங்கினார். இதை தற்போது வரை பாதுகாப்பாக வைத்துள்ளேன். இவ்வாறு கர்மான் கூறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?