Advertisement


தமிழக பவுலர்கள் அசத்தல்

நவம்பர் 28, 2018.
 Comments  
 


Cooch Behar Trophy, Cricket, Tamil Nadu, Himachal Pradesh, Sonu Yadav
 

நத்தம்: கூச் பெகார் டிராபி லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் 200 ரன்னுக்கு சுருண்ட ஹிமாச்சல பிரதேச அணி ‘பாலோ–ஆன்’ பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கும் கூச் பெகார் டிராபி (19 வயது) உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் தமிழகம், ஹிமாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் தமிழக அணி 489 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஹிமாச்சல பிரதேச அணி 5 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்திருந்தது.

சோனு அசத்தல்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஹிமாச்சல பிரதேச அணிக்கு சோனு யாதவ் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ வைபவ் சர்மா (97), ஷிவம் சர்மா (5), பிரிக்சித் காஷ்யப் (0) வெளியேறினர். தீபிந்தர் சிங் ராணா (11), பிரஷாந்த் பாக்சி (9) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

முதல் இன்னிங்சில் ஹிமாச்சல பிரதேச அணி 200 ரன்களுக்கு சுருண்டு ‘பாலோ–ஆன்’ பெற்றது. ஹிமான்சு பெக் (12) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

வைபவ் அரைசதம்: பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஹிமாச்சல பிரதேச அணிக்கு குஷால் பால் (22), பிரஷாந்த் டோமர் (13) சுமாரான துவக்கம் தந்தனர். பொறுப்பாக ஆடிய வைபவ் சர்மா (51), அமான் ஜெயின்வால் (47) கைகொடுத்தனர். கேப்டன் ரோகித் நரங் (2) நிலைக்கவில்லை.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் ஹிமாச்சல பிரதேச அணி 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து, 144 ரன் பின்தங்கி இருந்தது. சரண் (3), தீபிந்தர் சிங் ராணா (5) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் பார்கவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?