Advertisement


ஐ.எஸ்.எல்., வீரருக்கு 6 மாத தடை

நவம்பர் 26, 2018.
 Comments  
 


Age Fraud in Indian football  Gaurav Mukhi six month suspension raises more questions
 

 புதுடில்லி: வயது சர்ச்சையில் சிக்கிய ஐ.எஸ்.எல்., ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கவுரவிற்கு 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. 

ஐ.எஸ்.எல்., தொடரின் ஐந்தாவது சீசனில் 16 வயது வீரராக ஜாம்ஷெட்பூர் அணியில் அறிமுகம் ஆனார் கவுரவ் முகி. பெங்களூருவுக்கு எதிராக அசத்திய இவர், இத்தொடரில் கோல் அடித்த மிக இளம் வீரர் என பெருமை பெற்றார். இவர் 2002ல் பிறந்ததாக சான்றிதழ் கொடுத்துள்ளார். 

ஆனால் இவர் 1999ல் பிறந்துள்ளார். இதுகுறித்து சர்ச்சை ஏற்பட அகில இந்திய கால்பந்து சங்கத்தின் (ஏ.ஐ.எப்.எப்.,) ஒழுங்கு முறை கமிட்டி விசாரித்தது. இதில் கவுரவிற்கு ஆறு மாதம் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 

இதற்கு முன் ‘இரண்டு’

இதற்கு முன் கடந்த 2015ல் நடந்த தேசிய சப்–ஜூனியர் (15 வயதுக்குட்பட்ட) கால்பந்து தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக கவுரவ் விளையாடினார். அப்போதும் வயது சர்ச்சையில் சிக்கினார். பாஸ்போர்ட்டில் பிறந்த ஆண்டு 1999 என இருந்தது. இதனால் 2 ஆண்டு தடை கிடைத்தது. இதில் இருந்து மீண்ட இவர், இம்முறை ஐ.எஸ்.எல்., தொடரில் சிக்கினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?