Advertisement


ஆஸி., ஓபன் டென்னிஸ்: இந்திய சிறுவர்களுக்கு வாய்ப்பு

நவம்பர் 25, 2018.
 Comments  
 


australia open tennis, india kids
 

புதுடில்லி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில்,  பந்து எடுத்து தரும் அரிய வாய்ப்பு இந்திய சிறுவர்களுக்கு காத்திருக்கிறது.

 ஜாம்பவான்களான மெக்கென்ரோ (அமெரிக்கா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) உள்ளிட்டோர் டென்னிஸ் வாழ்க்கையை பந்து எடுத்து தரும் சிறுவர்களாக தான் துவக்கினர். இத்தகைய வாய்ப்பு இந்திய சிறுவர்களுக்கும் கிடைக்கவுள்ளது. மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் (ஜன. 14–27) கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதில் விளையாடும் நட்சத்திரங்களுக்கு பந்து எடுத்து தரும் சிறுவர், சிறுமிக்கான தேர்வு ‘கியா மோட்டார்ஸ்’ சார்பில் டில்லியில் நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து 12–15 வயதை சேர்ந்த 100 பேர் பங்கேற்றனர். ஆஸ்திரேலிய ஓபன் தொடரை நடத்தும் இரண்டு அதிகாரிகள் தலைமையில், முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் பூபதி முன்னிலையில் நடைபெற்றது. டென்னிஸ் கோர்ட்டில் பந்தை எடுத்து தரும் திறன் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட 10 சிறுவர், சிறுமிகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவர். இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்படுவர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?