Advertisement


சமீர் வர்மா மீண்டும் சாம்பியன்

நவம்பர் 25, 2018.
 Comments  
 


Syed Modi International Badminton, Sameer Verma, Champion
 

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் சீனாவின் லுா குவாங்ஜுவை தோற்கடித்தார்.

உ.பி., தலைநகர் லக்னோவில், சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் சமீர் வர்மா, சீனாவின் லுா குவாங்ஜு மோதினர். முதல் செட்டை 16–21 என இழந்த சமீர் வர்மா, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21–19 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 21–14 என தன்வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சமீர் வர்மா 16–21, 21–19, 21–14 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றார்.

தவிர இது, இந்த ஆண்டு சமீர் வர்மா வென்ற 3வது பட்டம். ஏற்கனவே ஐதராபாத் ஓபன், சுவிஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?