Advertisement


செய்னா நேவல் 2வது இடம்

நவம்பர் 25, 2018.
 Comments  
 


Syed Modi International Badminton, Saina Neywal, 2nd Place
 

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை செய்னா நேவல் 2வது இடம் பிடித்தார்.

உ.பி., தலைநகர் லக்னோவில், சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் ஹான் யூ மோதினர். மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய செய்னா 18–21, 8–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

இரட்டையரில் ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 11–21, 20–22 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் பஜர் ஆல்பியன், முகமது ரியான் அர்டியான்டோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி 15–21, 13–21 என, மலேசியாவின் சோவ் மெய் குவான், லீ மெங் யீன் ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?