Advertisement


இந்தியாவில் ஹாக்கி திருவிழா: ஒடிசாவில் உலக கோப்பை கோலாகலம்

நவம்பர் 25, 2018.
 Comments  
 


Akashdeep, hockey, india, world cup
 

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி தொடர் மூன்றாவது முறையாக இந்திய மண்ணில் நடக்கவுள்ளது. மூன்று வாரங்களுக்கு ஹாக்கி ரசிகர்களுக்கு ‘சூப்பர்’ விருந்து காத்திருக்கிறது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 1971 முதல் உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 14வது தொடர் வரும் 28ம் தேதி முதல் டிச. 16 வரை ஒடிசாவின் புவனேஸ்வரில் நடக்கவுள்ளது. 19 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 36 போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்காவுடன் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

எழுச்சி பெறுமா

ஒலிம்பிக்கில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கம் வென்ற பெருமையுடையது இந்திய அணி. இதன் பின் ஹாக்கி அரங்கில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே பெரும்பாடாகி விட்டது. உலக கோப்பை தொடரில் 1975ல் கோப்பை வென்றது இந்தியா. பின் 1982 (மும்பை), 1994ல் அதிகபட்சம் 5வது இடம் பிடித்தது தான் அதிகம். ஒவ்வொரு முறையும் நம்பிக்கையுடன் களமிறங்கி, கடைசியில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் சொதப்பி விடும். கடைசியாக சொந்த மண்ணில் 2010ல் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி 8 வது இடம் பிடித்து ஏமாற்றியது.

சமீபத்திய ஆறுதல்

சமீபத்திய தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு நம்பிக்கை தருகிறது. 2017ல் ஆசிய கோப்பை, இந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் சாம்பியன் ஆனது. நெதர்லாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது.

இருப்பினும் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த்தில் நான்காவது இடம் பிடித்தது சற்று ஏமாற்றம் தந்தது.

அணி எப்படி

இம்முறை கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணைக் கேப்டன் சிங்களன்சனா சிங் தனது 200 வது போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார். முன்கள வீரர்கள் ஆகாஷ் தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங் மற்றும் இளம் வீரர் சிம்ரன்ஜீத் சிங் கூட்டணி சொந்தமண்ணில் ஆதிக்கம் செலுத்துவர் என நம்பலாம். இவர்களது மின்னல் வேக தாக்குதல் திறன் எதிரணிகளுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், ஹர்மன்பிரீத் சிங், பிரேந்தர் லக்ரா உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு உதவ தயாராக உள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது. 

ஆஸி., பலம்

‘நடப்பு சாம்பியன்’, 2018ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் இதுவரை மூன்று முறை (1986, 2010, 2014) உலக கோப்பை வென்றுள்ளது. 2 முறை பைனல், 4 முறை 3வது இடம் என ஆஸ்திரேலியா மிரட்டல் பலத்தில் உள்ளது. ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி அணிகளும் கோப்பை வெல்ல போட்டியில் உள்ளதால் இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதன் முறையாக..

உலக கோப்பை ஹாக்கி தொடரில் முதன் முறையாக அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

* ‘கிராஸ் ஓவர்’ முறையில் முதன் முறையாக காலிறுதிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

* 2002க்குப் பின் 16 அணிகள் தற்போது பங்கேற்கின்றன.

* சீன அணி முதன் முறையாக உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது.

* 1990க்கு பின் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது......

16,000

உலக கோப்பை போட்டிகள் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கவுள்ளன. இங்கு கால்பந்து, தடகளம் உள்ள பல போட்டிகள் நடத்தலாம். 50 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. ஹாக்கி போட்டி நடக்கும் இடத்தில் 16,000 பேர் கண்டு ரசிக்கலாம். இத்தொடருக்காக 1,100 வீரர்கள், பயிற்சியாளர்கள் வரவுள்ளனர்.

‘பால் பாய்’

கடந்த 2013 ல் ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடந்தது. அப்போது மொகாலி மைதானத்தில் பந்து எடுத்து தரும் (‘பால் பாய்’) சிறுவனாக ஹர்திக் சிங் இருந்தார். தற்போது 20 வயதான இவர், வரும் உலக கோப்பை தொடரில் மத்திய கள வீரராக களமிறங்க உள்ளார்.

‘பாகிஸ்தான்’ கோப்பை

உலக கோப்பை தொடரில் வெல்லும் அணிக்கு சாம்பியன் கோப்பை தரப்படுகிறது. முதல் தொடரில் (1971) இருந்து வழங்கப்படும் இந்த கோப்பையை பாகிஸ்தானின் பஷீர் மூஜித் வடிவமைத்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் எலக்ட்ரிகல் அண்டு மெக்கானிக்கல் பிரிவினர் இதை தயாரித்தனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?