Advertisement


சர்வதேச பாட்மின்டன்: சிந்து விலகல்

நவம்பர் 18, 2018.
 Comments  
 


Syed Modi International Badminton, Sindhu, Skip
 

புதுடில்லி: சையது மோடி பாட்மின்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சிந்து விலகினார்.

உ.பி., தலைநகர் லக்னோவில், சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நாளை துவங்குகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இருந்து ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் சிந்து விலகினார். உலகின் ‘நம்பர்–4’ வீராங்கனையான இவர், சீனாவில் (டிச. 12–16) முதன்முறையாக நடக்கவுள்ள ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடருக்கு தயாராக போவதாக தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் (2016) வெள்ளி வென்ற சிந்து, இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய ஓபன், தாய்லாந்து ஓபனில் பைனல் வரை சென்ற இவர், ‘ஆல் இங்கிலாந்து ஓபனில்’ அரையிறுதியோடு திரும்பினார்.

‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடர், இந்த ஆண்டு சிந்து பங்கேற்கவுள்ள 18வது தொடர். இவர், இத்தொடரில் 3வது முறையாக பங்கேற்கவுள்ளார். கடந்த 2016ல் அரையிறுதியில் தோல்வியடைந்த இவர், கடந்த ஆண்டு பைனல் வரை சென்றிருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?