Advertisement


பட்டையை கிளப்பும் இந்திய பெண்கள்

நவம்பர் 18, 2018.
 Comments [1]  
 


mithali raj, india womens team
 

ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை இந்திய வீராங்கனைகள் அழுத்தமாக நிரூபித்து வருகின்றனர். 

கிரிக்கெட் அரங்கில்  ஆண்களின் ஆதிக்கமே நிலவுகிறது. இதனால், வீராங்கனைகளின் சாதனைகள் பெரிய அளவில் தெரியாமல் போகிறது. இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சத்தமில்லாமல் சாதனை புரிந்துள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிக்கு எதிராக அடுத்தடுத்து அரை சதம் அடித்தார். இதன் மூலம், ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன்கள் (2283) எடுத்த இந்திய நட்சத்திரம் என்ற சாதனையை எட்டினார். இதற்கு முன், இந்திய வீரர் ரோகித் சர்மா 2,207 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. இருவரும் ஒரே இன்னிங்சில் (80) இந்த இலக்கை எட்டியபோதும், ரன்கள் அடிப்படையில் மிதாலி முந்தினார். 

கோஹ்லியை முந்தினார்

ஒட்டுமொத்தமாக, ‘டுவென்டி–20’ அரங்கில் 2 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமையும் மிதாலியிடம் உள்ளது. 75 போட்டியில் இந்த பெருமை இவருக்கு வசமானது. மிதாலிக்குப்பின்தான், ஆண்கள் அணி கேப்டன் கோஹ்லி (எதிர்– இங்கிலாந்து, மான்செஸ்டர்) 2 ஆயிரம் ரன்களை எட்டினார். இதற்கு கோஹ்லிக்கு 58 போட்டி தேவைப்பட்டன. இப்படி வீரர்களையே முந்தி உள்ளார் மிதாலி. இவர் ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்தவர் என்றாலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
prabhakaran 4 days ago | Report abuse
பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு சமம் தான் அதை யாரும் மறுப்பதற்குஇல்லை




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?