Advertisement


வெண்கலம் வென்றார் லக்சயா சென்

நவம்பர் 18, 2018.
 Comments  
 


World Junior Badminton Championship, Lakshya Sen, Bronze Medal
 

மார்க்காம்: உலக ஜூனியர் பாட்மின்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெண்கலம் வென்றார். இவர், அரையிறுதியில் தாய்லாந்தின் குன்லவுட் விடித்சர்னிடம் தோல்வியடைந்தார்.

கனடாவில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், ‘நடப்பு சாம்பியன்’ தாய்லாந்தின் குன்லவுட் விடித்சர்ன் மோதினர். முதல் செட்டை 22–20 என போராடி கைப்பற்றிய லக்சயா சென், 2வது செட்டை 16–21 எனக் கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 13–21 என இழந்தார்.

ஒரு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் லக்சயா சென் 22–20, 16–21, 13–21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம்.

இதற்கு முன் நடந்த இத்தொடரில் இந்தியாவின் அபர்ணா போபட் (1996, வெள்ளி), செய்னா நேவல் (2008ல் தங்கம், 2006ல் வெள்ளி), குருசாய்தத் (2008, வெண்கலம்), சாய் பிரனீத் (2010, வெண்கலம்), பிரனாய் (2010, வெண்கலம்), சமீர் வர்மா (2011, வெண்கலம்), சிறில் வர்மா (2015, வெள்ளி) ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?