Advertisement


தமிழக நாயகி ஹேமலதா

நவம்பர் 10, 2018.
 Comments  
 


Hemalatha, india cricket team
 

கயானா: ஐ.சி.சி., சார்பில் பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்தித்தது. இப்போட்டியில் அறிமுக வாய்ப்பு பெற்றார் சென்னை வீராங்கனை ஹேமலதா, 24. இவர், 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து நல்ல துவக்கம் (6 ஓவரில் 51/0 ரன்) கண்ட நிலையில் பந்தை சுழற்றிய ஹேமலதா, 3வது பந்தில் தனது முதல் சர்வதேச விக்கெட் வீழ்த்தினார். 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்க்க இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாகிப் போனது.

இதற்கு முன்...

17 வயது வரை கிரிக்கெட் குறித்து எவ்வித எண்ணமும் இல்லாமல் இருந்தார் ஹேமலதா. சென்னை, ஆழ்வார்திருநகர் தெருக்களில் விளையாடிய இவர் 6 ஆண்டுக்கு முன் தனியார் கல்லுாரியில் சேர்ந்தார். பின் வாழ்க்கை மாறிப் போனது. தோழிகளுடன் சேர்ந்து கிரிக்கெட் முகாமில் பங்கேற்றார்.

தமிழக மற்றும் தெற்கு மண்டல அணிக்காக விளையாடிய ஹேமலதா, கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் முதன் முறையாக வாய்ப்பு பெற்ற போதும், ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. கடந்த செப். 11ல் நடந்த இலங்கை ஒருநாள் போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார்.

சமீபத்தில் ஹேமலதா கூறுகையில்,‘‘ முதலில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடினேன். இதை பெற்றோர் விரும்பவில்லை. நன்கு படித்து மாதம் ரூ. 25,000 அல்லது ரூ. 30,000 சம்பளம் வாங்க வேண்டும் என விரும்பினர். கல்லுாரியில் சேர்ந்த பின் பெண்கள் கிரிக்கெட்டில் தீவிர கவனம் செலுத்தினேன். தற்போது சர்வதேச அரங்கில் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?