Advertisement


இந்தியா– பாக்., பலப்பரீட்சை: பெண்கள் உலக கோப்பையில் ‘விறுவிறு’

நவம்பர் 10, 2018.
 Comments  
 


Harmanpreet Kaur, india, paistan, cricket
 

 கயானா: பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா– பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய வீராங்கனைகள் எளிதாக வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் தலா 5 ஆக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதுகின்றன. இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளபோதும், ‘நம்பர்–2’ அணி நியூசிலாந்தை சாய்த்தது. துவக்க வீராங்கனைகளான தானியா, மந்தனா முதல் போட்டியில் ஏமாற்றினர். இன்று இந்த தவறை திருத்திக்கொண்டால் நல்லது. ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் ஜோடியின் அபார ஆட்டம் நம்பிக்கை தருகிறது.

சாதித்த கேப்டன்

18 வயதான ரோட்ரிக்ஸ் எவ்வித அச்சமும் இல்லாமல் மிரட்டினார். 51 பந்தில் 103 ரன்கள் விளாசிய ‘சீனியர்’ வீராங்கனை ஹர்மன்பிரீத் (28 வயது) பங்களிப்பு இல்லாமல் 194 ரன்களை எட்டியது சாத்தியமில்லை. சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் முதல் சதம் அடித்த இந்திய வீராங்கனையான ஹர்மன்பிரீத்தின் வேட்டை இன்றும் தொடரும் என நம்பலாம். மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி இருப்பதால் ரன் குவிப்பு குறித்து கவலை வேண்டாம்.

‘சுழல்’ கூட்டணி

சுழற்பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக அறிமுக வீராங்கனை ஹேமலதா அசத்தினார். பூனம் யாதவ் (3 விக்.,), ராதா யாதவ் (2) இருப்பதால் ‘சுழல்’ கூட்டணி வலுவாக உள்ளது. இன்று பாகிஸ்தானுடன் மோதல் என்பதால் ‘வேகத்தில்’ அருந்ததியுடன் மனிஷ் ஜோஷி அல்லது பூஜா இணைய வாய்ப்புள்ளது.

சோகத்தில் பாக்.,

பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த சோகத்தில் இருக்கிறது. கேப்டன் ஜாவிரியா கான், ‘ஆல் ரவுண்டர்’ பிஷ்மா மரூப் இருந்தும் 166 ரன்களை ‘சேஸ்’ செய்ய முடியவில்லை. கடந்த போட்டியில் ஆயிஷா, நகிதா, நிடா தார் என ஒருவர் கூட இரட்டை இலக்கை தாண்டாதது இந்திய அணிக்கு சாதகம்தான். பவுலிங்கை பொறுத்தவரை நஷ்ரா, அலியா என இருவர் மட்டுமே விக்கெட் வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர் சனா மிர் இருந்தாலும், இந்திய வீராங்கனைகளை சமாளிப்பது கடினமே.

இதுவரை

இரு அணிகளும் இதுவரை 10 ‘டுவென்டி–20’யில் மோதி உள்ளன. இந்திய அணி 8 போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தான் இரண்டில் மட்டும் வென்றுள்ளது. கடந்த உலக கோப்பை தொடர் லீக் போட்டியில் (2016, டில்லி) இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. இன்று வென்றால் தக்க பதிலடி தரலாம்.

டாட்டின் 5 விக்கெட்

கயானாவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. ‘சேஸ்’ செய்த வங்கதேச அணிக்கு டாட்டின் ‘வேகத்தில்’ தொல்லை தந்தார். இவரது பந்துவீச்சில் பர்கானா (8), ருமானா (2) உள்ளிட்டோர் சிக்கினர். ஒரு வீராங்கனை கூட, இரட்டை இலக்கு ரன்களை எட்டவில்லை. முடிவில், வங்கதேச அணி 14.4 ஓவரில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

‘வேகத்தில்’ மிரட்டிய வெஸ்ட் இண்டீசின் டாட்டின், 3.4 ஓவரில் 5 ரன் மட்டும் வழங்கி 5 விக்கெட் வீழ்த்தினார். இதில் ஒரு ‘மெய்டன்’ ஓவர் அடங்கும். இதன்மூலம் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீராங்கனையானார். இதற்கு முன், 2016ல் சென்னையில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்காவின் சுனே லுாஸ், 4 ஓவரில், 8 ரன் மட்டும் வழங்கி 5 விக்கெட் வீழ்த்தியது சிறந்த செயல்பாடாக இருந்தது.

* தவிர, சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீராங்கனைகள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் டாட்டின். முதலிரண்டு இடங்களில் போட்ஸ்வானா அணியின் பாட்சோகோ மெபிடி (6 விக்., 8 ரன், 2.3 ஓவர், எதிர்: லெசோதோ, 2018), நியூசிலாந்தின் சாட்டர்த்வைட் (6 விக்., 17 ரன், 4 ஓவர், எதிர்: இங்கிலாந்து, 2007) உள்ளனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?