Advertisement


சேப்பாக்கம் எங்க கோட்டை... பக்கம் வந்தா வேட்டை: விண்டீசுக்கு இந்தியா சவால்

நவம்பர் 10, 2018.
 Comments  
 


rohit, india, west indies, cricket
 

சென்னை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ‘டுவென்டி–20’ போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. இதில் இந்திய அணி அசத்தும்பட்சத்தில், ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கோப்பை கைப்பற்றலாம்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி(அதிகாரப்பூர்வமாக விண்டீஸ்)மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை 2–0 என கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்றுசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தருகிறார். இவருடன் சேர்ந்து தவான், லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட், விக்கெட் கீப்பர் உள்ளூர் தினேஷ் கார்த்திக் ரன் மழை பொழியலாம்.  கடந்த 5 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ என பங்கேற்ற 7 போட்டிகளில் தவான் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இன்று பெரியளவில் ரன் குவித்தால் நல்லது. ஸ்ரேயாஸ் ஐயர், மண்ணின் மைந்தன் வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் நதீம் உள்ளிட்ட வீரர்களுக்கு களமிறங்கும் வாய்ப்பு தரப்படும் என நம்பப்படுகிறது.

புவனேஷ்வர் நம்பிக்கை

வேகப்பந்து வீச்சில் பும்ரா, உமேஷ் யாதவ், குல்தீப் இல்லை என்பதால் குர்னால் பாண்ட்யாவுடன் சகால் மீண்டும் அணிக்கு திரும்பலாம். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது ஜோடி இன்று அணிக்கு நம்பிக்கை தர வேண்டும்.

‘டாப்’ மோசம்

அனுபவ கெய்ல், எவின் லீவிஸ் இல்லாததால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ‘டாப்’ ஆர்டர் பலவீனமாக உள்ளது. ஹோப், ஹெட்மயர், ராம்தின் என மாறி மாறி வந்த போதும் ரன்கள் வந்த பாடில்லை. போலார்டு, பிராவோவும் பிரகாசிக்கவில்லை. இதனால் கேப்டன் பிராத்வைட்டுக்கு கூடுதல் நெருக்கடி தான். பவுலிங்கில் ஒசானே தாமஸ் மட்டும் வேகம் மற்றும் விக்கெட் வீழ்த்துவதில் ஆறுதல் தருகிறார்.  இவருக்கு மெக்காய், கீமோ பால் என ஒருவரும் உதவவில்லை.

ஆடுகளம் எப்படி

பொதுவாக சென்னை ஆடுகளத்தில் பந்து நன்றாக ‘சுழலும்’. இன்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவில் ஏற்படும் பனிப்பொழிவு இரண்டாவது பந்துவீசும் அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். இதனால் ‘டாஸ்’ வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்யலாம்.

மழை வருமா

மூன்றாவது ‘டுவென்டி–20’ நடக்கும் சென்னையில் இன்று வானம் தெளிவாக காணப்படும். இரவில் வெப்பநிலை அதிகபட்சம் 28, குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர 5 சதவீதம் வாய்ப்புள்ளது.

தோனி இல்லையே...

தமிழகம் ரசிகர்களின் ‘ஹீரோ’ தோனி. சென்னை இவருக்கு இரண்டாவது தாய் வீடு என்பர். இவர் இல்லாமல் சென்னையில் இன்று போட்டி நடக்கவுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.

2

சென்னையில் இரண்டாவது முறையாக சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி நடக்கவுள்ளது. இதற்கு முன் இங்கு 2012, செப். 11ல் தான் நடந்தது. தற்போது 6 ஆண்டுக்குப் பின் மீண்டும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி நடக்கவுள்ளது.

ஒரு ரன்...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1987ல் முதன் முறையாக ஒருநாள் போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரேலிய (270/6) இலக்கைத் துரத்திய இந்திய அணி (269/10) ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

* இதேபோல 2012ல் இங்கு நடந்த முதல் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் நியூசிலாந்து (167/5) இலக்கைத் விரட்டிய இந்திய அணி (166/4) ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

0.959

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் 2012, 2016 என இரு முறை சாம்பியன் கோப்பை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இருப்பினும் அணியின் வெற்றி சதவீதம் 0.959 தான். அதாவது மொத்தம் விளையாடிய 96 போட்டிகளில் 47 வெற்றி, 49 தோல்வி அடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?