Advertisement


சதம் விளாசியதன் பின்னணி: ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம்

நவம்பர் 10, 2018.
 Comments  
 


Harmanpreet Kaur
 

கயானா: ‘‘நியூசிலாந்துக்கு எதிராக வயிற்று வலி காரணமாக ஓட முடியாததால், சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதமடித்தேன்,’’ என, இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

கயானாவில் (வெஸ்ட் இண்டீஸ்) நடந்த பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான லீக் போட்டியில் இந்திய அணி (194/5, 20 ஓவர்), 34 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை (160/9, 20 ஓவர்) வீழ்த்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 51 பந்தில் 103 ரன்கள் (8 சிக்சர், 7 பவுண்டரி) குவித்தார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார்.

இதுகுறித்து ஹர்மன்பிரீத் கவுர் கூறியது: உலக கோப்பை தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி. இப்போட்டிக்கு முன், எனக்கு முதுகு வலி இருந்தது. காலையில் இருந்தே உடல் நிலை சரியில்லை. பேட்டிங் செய்ய களமிறங்கிய போது லேசான வயிற்று வலி இருந்தது. துவக்கத்தில் ஓடி ரன் எடுத்த போது வயிற்று வலி அதிகமானது. இதனால் பிஸியோதெரபிஸ்டிடம் மருந்து எடுத்துக் கொண்ட நான், ஓடி ரன் எடுக்காமல், சிக்சர், பவுண்டரிகளாக அடிக்க திட்டமிட்டேன். இதனை எதிரே இருந்த ஜெமிமாவிடமும் தெரிவித்துவிட்டேன். இதற்கு இவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு தந்தார். இதனால் என்னால் விரைவாக சதமடிக்க முடிந்தது. தவிர, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது கூடுதல் பலம்.

இவ்வாறு ஹர்மன்பிரீத் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?