Advertisement


நியூசி.,யை வென்றது பாக்.,

நவம்பர் 10, 2018.
 Comments  
 


Fakhar Zaman, pakistan
 

அபுதாபி: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பகார் ஜமான் அரைசதம் கடந்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு கோலின் முன்ரோ (13), ஜார்ஜ் ஒர்க்கர் (28) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் வில்லியம்சன் (1) ‘ரன் அவுட்’ ஆனார். டாம் லதாம் (1), கோலின் டி கிராண்ட்ஹோம் (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஹென்ரி நிகோல்ஸ் (33) ஆறுதல் தந்தார். ராஸ் டெய்லர் அரைசதம் கடந்தார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (86), பெர்குசன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் ஷா அப்ரிதி 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஜமான் அரைசதம்

சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் இமாம்–உல்–ஹக் (16) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். அபாரமாக ஆடிய பகார் ஜமான் (88) அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பாபர் ஆஸம் (46) ஓரளவு கைகொடுத்தார். சோயப் மாலிக் (10), கேப்டன் சர்பராஸ் அகமது (13) நிலைக்கவில்லை. சவுத்தீ பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய முகமது ஹபீஸ், வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 40.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹபீஸ் (27), ஷதாப் கான் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பெர்குசன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?