Advertisement


பஜ்ரங் புனியா ‘நம்பர்–1’

நவம்பர் 10, 2018.
 Comments  
 


Bajrang Punia, wrestling, india
 

புதுடில்லி: உலக மல்யுத்த தரவரிசையில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா (65 கி.கி.,) முதன்முறையாக ‘நம்பர்–1’ இடம் பிடித்தார்.

மல்யுத்த அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கான 65 கி.கி., எடைப்பிரிவு தரவரிசையில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, 96 புள்ளிகளுடன் முதன்முறையாக முதலிடம் பிடித்தார். இவர், இந்த சீசனில் மட்டும் 5 பதக்கம் வென்றுள்ளார். இதில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தலா ஒரு தங்கம், உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு வெண்கலம் அடங்கும்.

பெண்களுக்கான 57 கி.கி., எடைப்பிரிவு ரேங்கிங்கில் இந்தியாவின் பூஜா தண்டா, 52 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தார். இவர் (வெண்கலம்), உலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற 4வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றிருந்தார்.

மற்ற இந்திய வீராங்கனைகளான ரிது போகத் (10வது இடம், 33 புள்ளி, 50 கி.கி.,), சரிதா மோர் (7வது இடம், 29 புள்ளி, 59 கி.கி.,), நவ்ஜோத் கவுர் (9வது இடம், 32 புள்ளி, 68 கி.கி.,), கிரண் (9வது இடம், 37 புள்ளி, 76 கி.கி.,) ஆகியோர் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?