Advertisement


சென்னையில் அசத்துமா இந்தியா: நாளை மூன்றாவது ‘டுவென்டி–20’

நவம்பர் 09, 2018.
 Comments  
 


Dinesh Karthik, india cricket team, chennai
 

சென்னை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டி நாளை சென்னையில் நடக்கவுள்ளது. இந்திய அணியில் பும்ரா, குல்தீப், உமேஷ் யாதவுக்கு ஓய்வு தரப்பட்டது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் (0–2), ஒருநாள் (1–3) தொடர்களை இழந்தது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை 2–0 என கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. 

இப்போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று ‘டுவென்டி–20’, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் 21ம் தேதி முதல் ‘டுவென்டி–20’ பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் நாளை சென்னையில் களமிறங்கவுள்ள இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் என மூன்று பவுலர்களுக்கு ஓய்வு தரப்பட்டது.

முதல் இரு ‘டுவென்டி–20’ போட்டியில் 8 ஓவர்கள் பந்துவீசிய பும்ரா, 47 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். உமேஷ் யாதவ் ஒரு போட்டியில் 36 ரன்னுக்கு ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார். குல்தீப் முதல் இரு போட்டியில் 8 ஓவரில் 5 விக்கெட் கைப்பற்றினார். இவரது எக்கானமி ரேட் 5.62 ரன்களாக (ஓவருக்கு சராசரி ரன்) உள்ளது.இந்த மூவருக்கும் ஓய்வு தரப்பட்டதால், புவனேஷ்வர் குமார், கலீல் அகமதுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஓய்வு ஏன்

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தற்காலிக பொதுச்செயலர் அமிதாப் சவுத்ரி வெளியிட்ட செய்தியில்,‘ ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பான முறையில் தயாராக மூன்று வீரர்களுக்கும் ஓய்வு தரப்பட்டது. இவர்களுக்குப் பதில் சித்தார்த் கவுல் மட்டும் அணியில் சேர்க்கப்பட்டார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், சகால், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஷாபாஸ் நதீம், சித்தார்த் கவுல்.

6 ஆண்டுக்குப் பின்...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி தான் நடந்தது. கடந்த 2012, செப். 11ல் இங்கு நடந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.

‘சேஸ்’ செய்த இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டும் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. தற்போது 6 ஆண்டுக்குப் பின் இங்கு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி நடக்கவுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?