Advertisement


ஹர்மன்பிரீத் கவுர் சாதனை சதம்: நியூசி.,யை வென்றது இந்தியா

நவம்பர் 09, 2018.
 Comments [5]  
 


Harmanpreet Kaur, india womens team
 

கயானா: பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் கடந்து சாதனை படைத்தார்.

வெஸ்ட் இண்டீசில், பெண்களுக்கான 6வது ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, கயானாவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு தானியா பாட்யா (9), ஸ்மிருதி மந்தனா (2) ஏமாற்றினர். அறிமுக தமிழக வீராங்கனை ஹேமலதா (15) நிலைக்கவில்லை. இந்திய அணி 40 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சூப்பர் ஜோடி

பின் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். வாட்கின் வீசிய 10வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய ஹர்மன்பிரீத், சாட்டர்த்வைட் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஜெமிமா, 39 பந்தில் அரைசதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்த போது ஜெமிமா (59) அவுட்டானார். வாட்கின் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய ஹர்மன்பிரீத், சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இவர், 51 பந்தில் 103 ரன்கள் (8 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. இது, ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் பதிவான அதிகபட்ச ஸ்கோர். வேதா (2) அவுட்டாகாமல் இருந்தார்.

பேட்ஸ் அரைசதம்

கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு சுசீ பேட்ஸ், அனா பீட்டர்சன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது ஹேமலதா பந்தில் அனா (14) அவுட்டானார். பூணம் யாதவ் வீசிய 10வது ஓவரில் சோபி டிவைன் (9), ஜெஸ் வாட்கின் (0) அடுத்தடுத்து வெளியேறினர். தீப்தி சர்மா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பேட்ஸ் அரைசதமடித்தார். தவிர, ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் அதிக ரன் (787) குவித்த வீராங்கனையானார். கேப்டன் சாட்டர்த்வைட் (3) ஏமாற்றினார். அருந்ததி ரெட்டி ‘வேகத்தில்’ பேட்ஸ் (67) சரணடைந்தார். ஹேமலதா ‘சுழலில்’ மேடி கிரீன் (2) சிக்கினார். கேட்டி மார்டின் (39 ரன், 8 பவுண்டரி), காஸ்பெர்க் (19) ஆறுதல் தந்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹேமலதா, பூணம் யாதவ் தலா 3, ராதா யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது.

194

நியூசிலாந்துக்கு எதிராக 194 ரன்கள் குவித்த இந்திய பெண்கள் அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தனது 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்திருந்தது இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

* தவிர இது, பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் பதிவான அதிகபட்ச ஸ்கோரானது. இதற்கு முன், 2014ல் அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

134

பொறுப்பாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி 134 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடியானது. இதற்கு முன், கடந்த செப்டம்பர் மாதம் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனுஜா பாட்டீல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* தவிர ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில் 4வது விக்கெட்டுக்கு பதிவான அதிகபட்ச ரன்னானது. இதற்கு முன், 2009ல் தென் ஆப்ரிக்காவின் பிரிட்ஸ், பெனாடே ஜோடி 91 ரன் (எதிர்: நியூசி.,) சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

103

அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர், 51 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 103 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ வரலாற்றில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த ஜூன் மாதம் கோலாலம்பூரில் நடந்த மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் மிதாலி ராஜ் 97 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

* தவிர, ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில் சதமடித்த 3வது சர்வதேச வீராங்கனையானார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் டாட்டின் (112* ரன், எதிர்: தெ.ஆ., 2010), ஆஸ்திரேலியாவின் மேக் லானிங் (126 ரன், எதிர்: அயர்லாந்து, 2014) சதமடித்திருந்தனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
subramanian one week ago | Report abuse
More interesting than Men's T20 between India


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sakthi one week ago | Report abuse
கவுர் ஹாட்ஸ் ஆப் டு யு


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan one week ago | Report abuse
என்றும் வெற்றி நமதே


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
சூரிய புத்திரன் one week ago | Report abuse
சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?