Advertisement


சச்சினுடன் பிரித்வி பயிற்சி

நவம்பர் 09, 2018.
 Comments  
 


Prithvi Shaw, india test, sachin
 

மும்பை: ஆஸ்திரேலிய தொடருக்காக சச்சினின் கண்காணிப்பில் பயிற்சி செய்கிறார் இளம் வீரர் பிரித்வி ஷா.

ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி மூன்று ‘டுவென்டி–20’, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார் இளம் வீரர் பிரத்வி ஷா, 18. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகம் ஆன இவர் 134, 70, 33 ரன்கள் குவித்தார்.

அடுத்த நடந்த தியோதர் டிராபி தொடரி இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடிய போது சகார் பந்துவீச்சில் இவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பிரித்வி, மும்பை மிடில்சக்ஸ் குளோபல் அகாடமியில் ரப்பர் பந்துகளை வைத்து மணிக்கணக்கில் பயிற்சி செய்து வருகிறார்.

விரைவில் ரகானே தலைமையில் நியூசிலாந்து செல்லும் இவர், இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாட உள்ளார். பின் அடிலெய்டில் டிச. 6ல் துவங்கும் முதல் டெஸ்டில் பங்கேற்கவுள்ளார். இதனிடையே பிரித்வி பயிற்சியை இந்திய கிரிக்கெட் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் கண்காணித்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் எப்படி பேட்டிங் செய்வது குறித்து பல்வேறு ‘டிப்ஸ்’ தருகிறார்.

இதுகுறித்து வெளியான செய்தியில்,‘ சச்சின், பிரஷாந்த் ஷெட்டி, ஜகதீஷ் சவான் என மூன்று பேர் இணைந்து பிரத்விக்கு பந்துகளை ‘த்ரோ’ செய்து பேட்டிங் பயிற்சிக்கு உதவி வருகின்றனர். அவ்வப்போது ஈரமான ரப்பர் பந்துகளையும் சச்சின் பயன்படுத்துகிறார். பிரித்விக்கு பயிற்சி தருவதற்கு என்றே சச்சின் காலையில் சீக்கிரமாகவே அகடாமிக்கு வந்து விடுகிறார்,’ என கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?