Advertisement


இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை

நவம்பர் 09, 2018.
 Comments  
 


moeen ali, england team, srilanka
 

காலே: காலே டெஸ்டில் இங்கிலாந்தின் மொயீன் அலி, ஜாக் லீச் ‘சுழலில்’ அசத்த இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342, இலங்கை 203 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது. கருணாரத்னே (7), கவுசால் சில்வா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

மாத்யூஸ் ஆறுதல்

4ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு கவுசால் சில்வா (30), கருணாரத்னே (26) கைகொடுக்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் ‘வேகத்தில்’ தனஞ்செயா டி சில்வா (21) அவுட்டானார். ஜாக் லீச் ‘சுழலில்’ குசால் மெண்டிஸ் (45), கேப்டன் சண்டிமால் (1) சிக்கினர். பொறுப்பாக ஆடிய மாத்யூஸ் அரைசதமடித்தார். மொயீன் அலி பந்தில் டிக்வெல்லா (16), மாத்யூஸ் (53) ஆட்டமிழந்தனர்.

சுழல் பலம்

அடில் ரஷித் ‘சுழலில்’ தில்ருவான் பெரேரா (30) வெளியேறினார். மொயீன் அலியிடம் அகிலா தனஞ்செயா (8) சரணடைந்தார். ஹெராத் (5) ‘ரன்–அவுட்’ ஆனார். இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 250 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. சுரங்கா லக்மல் (14) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 4, ஜாக் லீச் 3, ரஷித் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் கண்டியில் துவங்குகிறது.

முதல் வெற்றி

இலங்கையை வீழ்த்தியதன் மூலம், காலே மைதானத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டிக்கு முன் இங்கு விளையாடிய 4 போட்டியில் 2ல் இலங்கை வென்றது. இரண்டு போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

* தவிர இது, இலங்கை மண்ணில் இங்கிலாந்துக்கு கிடைத்த 5வது வெற்றி. இதற்கு முன் கொழும்பு (1982, 2001, 2012), கண்டி (2001) மைதானங்களில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தது.

ஹெராத் ‘குட் பை’

காலே டெஸ்ட் போட்டியுடன் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹெராத், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 1999ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காலே டெஸ்டில் அறிமுகமான இவர், 93 டெஸ்ட் (433 விக்கெட்), 71 ஒருநாள் (71 விக்கெட்), 17 சர்வதேச ‘டுவென்டி–20’ (18 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார்.

* காலே டெஸ்டில் 3 விக்கெட் கைப்பற்றிய ஹெராத், 93 டெஸ்டில் 433 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களுக்கான பட்டியலில் 8வது இடத்தை இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்) உள்ளார்.

* இவர் காலே மைதானத்தில் 19 டெஸ்டில் 102 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரே மைதானத்தில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 3வது பவுலரானார். ஏற்கனவே இலங்கையின் முரளிதரன் (கொழும்புவில் 166, கண்டியில் 117, காலேயில் 103 விக்கெட்), இங்கிலாந்தின் ஆண்டர்சன் (லார்ட்சில் 103 விக்கெட்) இச்சாதனை படைத்திருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?