Advertisement


தென் ஆப்ரிக்காவை வென்றது ஆஸி.,

நவம்பர் 09, 2018.
 Comments  
 


Stoinis, australia, south africa
 

அடிலெய்டு: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. 2வது போட்டி அடிலெய்டில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ரபாடா அசத்தல்

ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (8) ஏமாற்றினார். ரபாடா ‘வேகத்தில்’ ஷான் மார்ஷ் (22) வெளியேறினார். கேப்டன் ஆரோன் பின்ச் (41), கிறிஸ் லின் (44), அலெக்ஸ் கேரி (47) ஓரளவு கைகொடுத்தனர். பிரிடோரியஸ் பந்தில் மேக்ஸ்வெல் (15), ஸ்டாய்னிஸ் (2) அவுட்டாகினர். ஸ்டைன் ‘வேகத்தில்’ கம்மின்ஸ் (3), மிட்சல் ஸ்டார்க் (6) ‘பெவிலியன்’ திரும்பினர். ரபாடாவிடம் ஜாம்பா (22) சரணடைந்தார்.

ஆஸ்திரேலிய அணி 48.3 ஓவரில் 231 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.  தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 4, பிரிடோரியஸ் 3, ஸ்டைன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

மில்லர் அரைசதம்

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (9) ஏமாற்றினார். மார்க்ரம் (19) ‘ரன் அவுட்’ ஆனார். ரீஜா ஹென்டிரிக்ஸ் (16), ஹெய்ன்ரிச் கிளாசன் (14) நிலைக்கவில்லை. கேப்டன் டுபிளசி (47) அரைசத வாய்ப்பை இழந்தார். டேவிட் மில்லர் (51) அரைசதமடித்தார்.

தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல் வீசிய 50வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 12 ரன் மட்டுமே கிடைத்தது. தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நிகிடி (19), இம்ரான் தாகிர் (11) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டாய்னிஸ் 3, ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது.

முற்றுப் புள்ளி

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக சந்தித்த 7 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கடைசியாக கடந்த ஜன. 26ல் அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வென்றிருந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 6, தென் ஆப்ரிக்காவிடம் ஒரு போட்டி என தொடர்ச்சியாக 7ல் தோல்வியடைந்திருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?