Advertisement


முதல் கோப்பை வெல்லுமா இந்திய அணி: உலக ‘டுவென்டி–20’ இன்று துவக்கம்

நவம்பர் 08, 2018.
 Comments [1]  
 


inida womens twenty 20, world cup
 

கயானா: பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் இன்று வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் துவங்குகிறது. 6 இளம் வீராங்கனைகளுடன் களமிறங்கும் இந்திய அணி இத்தொடரில் சாதித்து முதன் முறையாக கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி., சார்பில் பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. வழக்கமான ஆண்கள் உலக கோப்பை தொடருடன் சேர்த்து நடத்தப்படும். முதன் முறையாக ஆறாவது பெண்கள் தொடர் வெஸ்ட் இண்டீசில் தனியாக நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா எப்படி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, ‘ஹாட்ரிக்’ பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வலிமையான அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதுவரை பங்கேற்ற ஐந்து தொடர்களில் ஒருமுறை கூட கோப்பை வென்றது கிடையாது. அதிகபட்சம் 2009, 2010ல் அரையிறுதி வரை முன்னேறியது. கடந்த மூன்று தொடர்களில் லீக் சுற்றை தாண்டியது இல்லை.

திடீர் எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய பெண்கள் அணி பைனலுக்கு முன்னேறி அசத்தியது. இதன் பின் இந்திய பெண்கள் அணி மீது அதிக எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. இதற்கேற்ப இந்திய மண்ணில் நடந்த சமீபத்திய போட்டிகளில் இலங்கை, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளை வென்றது. சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீசை சாய்த்தது. இன்று தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கவுள்ளது. ‘சீனியர்’ மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா இருவரும் இணைந்து அணிக்கு சிறப்பான துவக்கம் தர வேண்டும். ‘மிடில் ஆர்டரில்’ இளம் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தானியா பாட்யா, ஹர்மன்பிரீத் கவுர் பலம் தர காத்திருக்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றதால் சற்று பலவீனமாக உள்ளது. சுழலில் பூணம் யாதவ் நம்பிக்கை தருகிறார். அதே நேரம் ஆசிய கோப்பை ‘டுவென்டி–20’ பைனலில் வங்கதேசத்திடம் தோற்றது சற்று ஏமாற்றமாக உள்ளது. இம்முறை சுதாரித்துக் கொள்ளும் பட்சத்தில் இந்திய அணி முதல் கோப்பை வென்று திரும்பலாம்.

ஆஸி., பலம்

மூன்று முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியும் கோப்பை வெல்லும் போட்டியில் உள்ளது. தவிர சொந்தமண்ணில் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளும் தொடரில் கடும் சவால் தர காத்திருக்கின்றன.

ஆஸி., ஆதிக்கம்

இதுவரை நடந்த ஐந்து ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 2010, 2012–13, 2013–14 என ‘ஹாட்ரிக்’ கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. தவிர இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2015–16) தலா ஒரு முறை கோப்பை கைப்பற்றின.

9

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி 21 போட்டிகளில் பங்கேற்றது. இதில் 9ல் மட்டும் தான் வென்றது. 12 போட்டிகளில் தோல்வியடைந்தது.

‘குரூப் ஆப் டெத்’

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகள் உள்ளன. ‘குரூப் ஆப் டெத்’ என்றழைக்கப்படும் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லார்ந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

பைனல் எப்படி

மொத்தம் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவுகளில் உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் முறையில் மோதும். முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 22) செல்லும். இதில் வெற்றி பெறும் அணி நவ. 24ம் தேதி நடக்கவுள்ள பைனலில் மோதும்.

அதிகம், குறைவு

வங்கதேசத்துக்கு எதிராக 163/5 ரன்கள் (2016) எடுத்தது தான் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி எடுத்த அதிகபட்ச ரன்கள். ஒட்டுமொத்தமாக அயர்லாந்துக்கு (2014) எதிராக ஆஸ்திரேலிய அணி 191/4 ரன்கள் எடுத்தது அதிகமாக உள்ளது.

* இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேச அணி 58/9 ரன் (2014) எடுத்தது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட குறைந்த பட்ச ஸ்கோராக உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Ramasubramanian 2 weeks ago | Report abuse
இந்தியா டெபினிட்லயு வின் திஸ் வேர்ல்ட் கப்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?