Advertisement


துப்பாக்கி சுடுதல்: சவுரப் சவுத்ரி தங்கம்

நவம்பர் 08, 2018.
 Comments  
 


Saurabh Chaudhary, india shooting
 

குவைத் சிட்டி: ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ ஜூனியர் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.

குவைத்தில், 11வது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஜூனியர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அர்ஜுன் சிங் சீமா, அன்மோல் ஜெயின் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1731 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

தனிநபர் தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இவர்கள் மூவரும் பைனலுக்குள் நுழைந்தனர். பைனலில் அசத்திய சவுரப் சவுத்ரி 239.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் 237.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அன்மோல் (195.1 புள்ளி) 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார். வெண்கலப் பதக்கத்தை சீனதைபேயின் ஹுவாங் வெய்–டி (218.0 புள்ளி) வென்றார்.

நான்காவது தங்கம்

சமீபகாலமாக சர்வதேச துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி, 16, சிறப்பாக செயல்படுகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (2018, செப்டம்பர், இடம்: தென் கொரியா), யூத் ஒலிம்பிக் (2018, அக்டோபர், இடம்: அர்ஜென்டினா) போட்டிகளில் தலா ஒரு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் கடந்த 4 மாதங்களில் 4 தங்கம் வென்று சாதித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?