Advertisement


ருபிந்தர் பால், சுனில் நீக்கம்

நவம்பர் 08, 2018.
 Comments  
 


rupinder singh, india hockey team
 

புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் ருபிந்தர் பால் சிங், எஸ்.வி. சுனில் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், ஆண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28ல் துவங்குகிறது. வரும் டிச. 16 வரை நடக்கவுள்ள இத்தொடரில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இந்தியா, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வரும் 28ல் சந்திக்கிறது. அதன்பின் பெல்ஜியம் (டிச. 2), கனடா (டிச. 8) அணிகளுடன் மோதுகிறது.

இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவ வீரர்களான ருபிந்தர் பால் சிங், எஸ்.வி. சுனில் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த மாதம் மஸ்கட்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியின் போது எஸ்.வி. சுனிலின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இவரது காயம் முழுமையாக குணமடையாததால் உலக கோப்பைக்கு தேர்வாகவில்லை. ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்படாத ருபிந்தர் பால் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

கோல்கீப்பர்களாக ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதுார் பதக் தேர்வாகினர். சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்காத ஒடிசா வீரர் பிரேந்திர லக்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமித் ரோஹிதாஸ், சுரேந்தர் குமார், கோதாஜித் சிங், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார் ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

கேப்டனாக மன்பிரீத் சிங், துணைக் கேப்டனாக சிங்லன்சனா சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி: ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பர்), கிருஷ்ணன் பகதுார் பதக் (கோல்கீப்பர்), மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லன்சனா சிங் (துணைக் கேப்டன்), ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, வருண் குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், நீலகண்ட சர்மா, ஹர்திக் சிங், சுமித், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித் குமார் உபத்யாய், சிம்ரன்ஜீத் சிங்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?