Advertisement


இங்கிலாந்து பிடியில் இலங்கை

நவம்பர் 08, 2018.
 Comments  
 


Keaton Jennings, england cricket team
 

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜென்னிங்ஸ் சதம் கடந்து கைகொடுக்க 2வது இன்னிங்சில் 322 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, 461 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றது.

இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342, இலங்கை 203 ரன்கள் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (11), ஜென்னிங்ஸ் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜென்னிங்ஸ் அபாரம்

நேற்று, 3ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் பர்ன்ஸ் (23) ‘ரன் அவுட்’ ஆனார். மொயீன் அலி (3), கேப்டன் ஜோ ரூட் (3) சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினர். பின் இணைந்த ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஜோடி ரன் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது ஸ்டோக்ஸ் (62) அவுட்டானார். அடுத்து வந்த பட்லர் (35), போக்ஸ் (37) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய ஜென்னிங்ஸ் சதம் கடந்தார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜென்னிங்ஸ் (146) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தில்ருவான் பெரேரா, ஹெராத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கு

பின் 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது. கருணாரத்னே (7), கவுஷல் சில்வா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?