Advertisement


இந்திய தொடர்: ஸ்டார்க், லியான் ஓய்வு

நவம்பர் 08, 2018.
 Comments  
 


starc, australia cricket team, india
 

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் இருந்து ஸ்டார்க், லியானுக்கு ஓய்வு தரப்பட்டது. 

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று ‘டுவென்டி–20’, நான்கு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் 21ல் பிரிஸ்பேனில் முதல் ‘டுவென்டி–20’ போட்டி நடக்கவுள்ளது. 

இதற்கிடையே, ‘டுவென்டி–20’ தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க், சுழற்பந்துவீச்சாளர் லியானுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில், ‘ஆல் ரவுண்டர்’ மிட்சல் மார்ஷ்க்கும் ஓய்வு வழங்கி உள்ளனர். இவர்களுக்குப்பதில், ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டாய்னிஸ், பெகன்டிரப்பிற்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கேப்டனாக பின்ச் செயல்படுவார். கூல்டர் நைல், மேக்ஸ்வெல், ஜாம்பா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். 

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில்,‘‘ ஸ்டார்க், லியான் உள்ளிட்டோர் மூன்றுவிதமான போட்டியிலும் விளையாட விருப்பமாக உள்ளனர். ஆனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தொடர் (டிச. 6– ஜன. 3) சவால் நிறைந்தது. இதற்கு தயாராகும் விதமாக, இவர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது,’’ என்றார். 

அணி விவரம்: பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே, ஆஷ்டன் ஏகார், பெகன்டிரப், கூல்டர் நைல், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், மெக்டெர்மட், ஷார்ட், ஸ்டான்லேக், ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஜாம்பா.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?