Advertisement


கால்பந்து: இந்திய பெண்கள் ‘டிரா’

நவம்பர் 08, 2018.
 Comments  
 


soccer, india womens team
 

யங்கோன்: ஒலிம்பிக் தகுதி கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாள பெண்கள் அணிகள் மோதிய போட்டி ‘டிரா’ ஆனது.

ஜப்பானின் டோக்கியோவில் 2020ல் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதற்கான பெண்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்க ஆசிய பிரிவு தகுதிச்சுற்றில் 26 அணிகள் மோதுகின்றன. ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் நேபாளத்தை சந்தித்தது.

போட்டியின் 11வது நிமிடத்தில் நேபாள அணியின் நிரு தபா முதல் கோல் அடிக்க, இந்திய அணி 0–1 என பின் தங்கியது. தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 29 வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய கமலா தேவி கைகொடுத்தார். இவர் 37வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இரண்டாவது பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் இப்போட்டி 1–1 என சமன் ஆனது. இந்திய அணி அடுத்த போட்டியில் வரும் 11ம் தேதி வங்கதேசத்தை சந்திக்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?