Advertisement


பவுல்ட் ‘ஹாட்ரிக்’: நியூசி., வெற்றி

நவம்பர் 07, 2018.
 Comments  
 


Pakistan, New Zealand, One Day Cricket, Boult, Hat Trick Records
 

அபுதாபி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பவுல்ட் ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க நியூசிலாந்து அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி அபுதாபியில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு கோலின் முன்ரோ (29), கேப்டன் வில்லியம்சன் (27) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ராஸ் டெய்லர் (80), டாம் லதாம் (68) அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்தது. பெர்குசன் (3), பவுல்ட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் ஷா அப்ரிதி 4 விக்கெட் வீழ்த்தினார்.

பவுல்ட் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு டிரண்ட் பவுல்ட் தொல்லை தந்தார். இவர் வீசிய 3வது ஓவரின் 2வது பந்தில் பகார் ஜமான் (1) போல்டானார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த இரண்டு பந்தில் பாபர் ஆசம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரை வெளியேற்றி ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றினார்.

இமாம்–உல்–ஹக் (34), சோயப் மாலிக் (30) ஆறுதல் தந்தனர். பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 85 ரன் எடுத்து திணறியது. பின் இணைந்த கேப்டன் சர்பராஸ் அகமது (64), இமாத் வாசிம் (50) ஜோடி ஓரளவு கைகொடுத்தது.

பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 219 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் பவுல்ட், பெர்குசன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

3வது வீரர்

வேகத்தில் மிரட்டிய டிரண்ட் பவுல்ட், ஒருநாள் போட்டி வரலாற்றில் முதன்முறையாக ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் இவர், ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 3வது நியூசிலாந்து பவுலரானார். ஏற்கனவே டேனி மோரிசன் (எதிர்: இந்தியா, 1994, இடம்: நேப்பியர்), ஷேன் பாண்ட் (எதிர்: ஆஸி., 2007, இடம்: ஹோபர்ட்) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர். இது, சர்வதேச ஒருநாள் போட்டியில் பதிவான 46வது ‘ஹாட்ரிக்’.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?