Advertisement


கோஹ்லி கோபம்...ரசிகருக்கு சாபம்

நவம்பர் 07, 2018.
 Comments [5]  
 


Virat Kohli, India, Cricket, Fans Comments
 

புதுடில்லி: கோஹ்லி சாதாரணமாகவே கோபக்காாரர். இவரது ஆத்திரத்தை இன்னும் அதிகமாக துாண்டும் வகையில் விமர்சித்த ரசிகரை, நாட்டு விட்டு வெளியேறும்படி கூறி சர்ச்சை கிளப்பியிருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி. அருமையான ‘பார்மில்’ இருக்கும் இவர், ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டினார். சமீபத்திய வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்தார். இப்படி ரன் மழை பொழியும் இவரை, கிரிக்கெட் பிரபலங்கள் வாயார புகிழ்கின்றனர். ஒரு ரசிகர் மட்டும் வம்பு பேசி மாட்டிக் கொண்டுள்ளார். தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆப்’ ஒன்றை கோஹ்லி வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள இந்த ‘வீடியோ’வில் ரசிகர் ஒருவர் கூறுகையில்,‘கோஹ்லியின் ‘பேட்டிங்கை’ மிகைப்படுத்துகின்றனர். இவரது ஆட்டத்தில் ‘ஸ்பெஷல்’ எதுவும் இல்லை. இந்திய பேட்ஸ்மேன்களைவிட  இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை தான் ரசித்து பார்ப்பேன்,’’என, குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கோஹ்லி ஆவேசமாக அளித்த பதிலில்,‘நீங்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசியுங்கள். என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை. இந்தியாவில் வசித்து கொண்டு, மற்றவர்களை விரும்புவது சரியல்ல,’ என, தெரிவித்துள்ளார்.

இந்த ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் ‘வைரலாகி’ வருகிறது. கோஹ்லியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது. சரியான பதிலடி கொடுத்துள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். வீரர்களின் ஆட்டத்தை புகழ்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இதற்காக நாட்டை விட்டு வெளியேற சொல்வதில் நியாயமில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   1  
அம்பி ஐயர் 2 weeks ago | Report abuse
தனக்கு ஒருவரது ஆட்டம் பிடிக்கவில்லையெனில் நாட்டை விட்டு வெளியே போகச் சொல்வதா....??? முதிர்ச்சியற்றவர் கோஹ்லி.....


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
b srinivasan 2 weeks ago | Report abuse
விமர்சனம் செய்பவர்கள் வார்த்தைகள் நாகரீகமாக இருக்கவேண்டும். விராட் போன்ற வீரர்களை கேவலப்படுத்தும் விதமான விமர்சனம் தேவையில்லாதது. விராட் அவமானப்பட்டதாக உணர்த்துள்ளார்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Ram 2 weeks ago | Report abuse
மதிக்கத் தெரியாத மனிதன். யாரை பிடிக்கும் என்பது அவரவர் விருப்பம்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
K. MANIMARAN 2 weeks ago | Report abuse
கோஹ்லி தன் திறமையால் உலக மக்களையே மகிழ்வித்து வருகிறார். தொடர்ந்து விளையாடி வருவதால் ஓய்வு எடுத்து வருகிறார். இத்தருணத்தில் அவர் மனதளவில் சோர்வு அடைய செய்திருக்க வேண்டாம். அவரை விமர்சித்த ரசிகர், கோஹ்லியை வெளிநாட்டு வீரர்களுடன் வொப்பிடாமல் , ரசிகர் தனக்கு பிடித்த வெளிநாட்டு வீரர்களை மட்டும் பிடிக்கும் என்று சொல்லி இருக்கலாம், ஏனெனில் கோஹ்லியே தன் முந்தைய பதிவுகளில் பல வெளி நட்டு வீரர்களை தன் முன் மாதிரியாக கொண்டு விளையாடி வருவதாக சொல்லி இருக்கிறார். பல வெளி நட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களே கோஹ்லியின் திறமையை பாராட்டி இருக்கிறார்கள். கோஹ்லி இந்த ரசிகரின் கருத்தை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். நன்றி ..


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Panneer 2 weeks ago | Report abuse
கிரிக்கெட் இங்கிலாந்துக்கு ஒரு காலத்தில் அடிமையாக இருந்த நாடுகள் மட்டுமே எஜமான் விசுவாசம் மாறாமல் இன்றும் விளையாடுகின்றன. மிக பெரிய அடிமைநாடாக இருந்த இந்தியா இந்த அடிமை விளையாட்டுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது துரதிர்ஷ்டமே... இலங்கை,வெஸ்ட் இண்டீஸ்,வங்காளதேசம்,நியூசிலாந்து போன்ற சிறிய நாடுகளுடன் மோதி ரன் குவிப்பது இதையே சாதனை பட்டியலில் சேர்த்து புகழடைவது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவிடாது.நமது பொருளாதார இழைப்பதை தவிர லாபம் ஒன்றும் இல்லாத விளையாட்டு.இதில் கேடுகெட்ட லலித் மோடி கண்டுபிடித்த IPL வேறு ஏலத்தில் விலை போகும் ஆட்டக்கார வீரர்கள்..ஒரு காலத்தில் நவாப்பை இருந்த பட்டோடி, ஸ்டேட் பாங்கில் வேலை பார்த்த GR விஸ்வநாத் போன்றோர்களெல்லாம் மிக எளிமையா இருந்த காலம் நினைவுக்கு வருகிறது.அந்த காலத்தில் ரேடியோவில் மிக பெரிய பதவியில் இருந்தவர்களெல்லாம் கூட ஸ்கோர் கேட்பார்கள்.பாகிஸ்தானை போல இந்தியாவிலும் கிரிக்கெட் காரன் பிரதமர் கனவில் இருப்பதையே காட்டுகிறது திமிர் பிடித்த பேச்சு.நாடு கடத்த வெல்லாம் எவனுக்கும் அதிகாரமில்லை.
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?