Advertisement


‘கெத்து’ காட்டும் ரோகித்: லாரா பாராட்டு

நவம்பர் 07, 2018.
 Comments  
 


Rohit Sharma, Cricket, India, Lara
 

லக்னோ: ‘‘இந்திய வீரர் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ ஜாம்பவானாக மாறி வருகிறார்,’’ என, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி லக்னோவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

ரோகித் விளாசல்: முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அசத்தினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோகித் (111 ரன், 61 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி), லோகேஷ் ராகுல் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

அபார பந்துவீச்சு: கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும் எடுத்து 71 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 2–0 எனக் கைப்பற்றியது.

நான்கு சதம்: இப்போட்டியில் மிரட்டிய ரோகித், ‘டுவென்டி–20’ போட்டியில் 4வது சதம் அடித்தார். இதன் மூலம் ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் கோலின் முன்ரோவை (3 சதம்) முந்தி முதலிடம் பிடித்தார். தவிர, சர்வதேச ‘டுவென்டி–20’யில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோஹ்லியை (2,102 ரன், 62 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். இவர், 86 போட்டியில் 2,203 ரன்கள் எடுத்துள்ளார்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா கூறுகையில், ‘‘ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ போட்டிகளில் ரன் எடுக்கும் செயல்பாட்டின் அடிப்படையில் ரோகித் சர்மா தான் உலகின் ‘நம்பர்–1’ பேட்ஸ்மேன். இவர், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக மாறி வருவதை காண முடிகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் எந்த ஒரு அணியும் தங்கள் அணிக்காக விளையாட இவரை தேர்வு செய்ய முன் வரும். உலக லெவன் அணியிலும் இவருக்கு இடம் உண்டு,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?