Advertisement


உலக செஸ்: ஹரிகா ‘டிரா’

நவம்பர் 07, 2018.
 Comments  
 


Womens World Chess Championship, Harika, Koneru Humpy
 

கான்டி மான்சிஸ்க்: உலக செஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கான 2வது போட்டியை இந்திய வீராங்கனை ஹரிகா ‘டிரா’ செய்தார்.

ரஷ்யாவில், பெண்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 64 பேர் பங்கேற்கும் இத்தொடருக்கான போட்டிகள் ‘நாக்–அவுட்’ முறையில் நடக்கிறது. ஒவ்வொரு சுற்றிலும் 2 போட்டிகள் நடக்கும்.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற ஹரிகா துரோணவள்ளி, 2வது சுற்றில் ஜார்ஜியாவின் பெலா கோடினாஷ்விலியை சந்தித்தார். இதன் முதல் போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 64வது நகர்த்தலின் போது ‘டிரா’ செய்தார்.

பின் 2வது போட்டியில் ஹரிகா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 26வது நகர்த்தலின் போது ‘டிரா’ ஆனது. இதனையடுத்து ஹரிகா, கோடினாஷ்விலி மோதிய 2வது சுற்று 1–1 என சமநிலையில் உள்ளது. இனி, ‘டை பிரேக்கர்’ மூலம் வெற்றியாளர் முடிவாகும்.

ஹம்பி ஏமாற்றம்: மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, போலந்தின் ஜோலந்தா ஜவாட்ஸ்கா மோதினர். இதன் முதல் போட்டியை ஹம்பி ‘டிரா’ செய்தார். பின், வெள்ளை நிற காய்களுடன் 2வது போட்டியில் விளையாடிய இவர், 95வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார். முடிவில் ஹம்பி 0.5 – 1.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?