Advertisement


இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்

நவம்பர் 07, 2018.
 Comments  
 


England, Sri Lanka, Gale Test Cricket
 

காலே: முதல் டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 203 ரன்களுக்கு சுருண்டது.

இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. போக்ஸ் (87), லீச் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் (15), தில்ருவான் பெரேரா ‘வேகத்தில்’ வெளியேறினார். அபாரமாக ஆடிய அறிமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பென் போக்ஸ் சதம் கடந்தார். இவர், 107 ரன் எடுத்து சுரங்கா லக்மல் பந்தில் அவுட்டானார். இதன்மூலம் அறிமுக டெஸ்டில் சதமடித்த 20வது இங்கிலாந்து வீரரானார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 342 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இலங்கை சார்பில் தில்ருவான் பெரேரா 5, லக்மல் 3 விக்கெட் கைப்பற்றினர்.

மொயீல் அசத்தல்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு கருணாரத்னே (4), குஷால் சில்வா (1) ஏமாற்றினர். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் (19), தனஞ்செயா டி சில்வா (14) நிலைக்கவில்லை. கேப்டன் சண்டிமால் (33) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மாத்யூஸ் (52) அரைசதமடித்தார். மொயீன் அலி ‘சுழலில்’ டிக்வெல்லா (28), அகிலா தனஞ்செயா (0) சிக்கினர். தில்ருவான் பெரேரா (21), சுரங்கா லக்மல் (15) கைகொடுக்கவில்லை.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 203 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஹெராத் (14) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (11), ஜென்னிங்ஸ் (26) அவுட்டாகாமல் இருந்தனர். பத்து விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 177 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?