Advertisement


ஒரே ஓவரில் 43 ரன்: நியூசிலாந்து ஜோடி உலக சாதனை

நவம்பர் 07, 2018.
 Comments  
 


43 Runs In An Over, Joe Carter, Brett Hampton, New Zealand, Northern Districts, Willem Ludick, Central Districts
 

ஹாமில்டன்: நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் ஒருநாள் போட்டியில் நார்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியின் கார்டர், ஹாம்ப்டன் ஜோடி ஒரு ஓவரில் 43 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடந்த ‘போர்டு டிராபி’ உள்ளூர் ஒருநாள் தொடருக்கான லீக் போட்டியில் நார்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி (313/7, 50 ஓவர்), 25 ரன் வித்தியாசத்தில் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை (288/9, 50 ஓவர்) வீழ்த்தியது.

இப்போட்டியில் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வில்லெம் லுாதிக், 9 ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி 42 ரன் மட்டுமே வழங்கியிருந்தார். இவரது 10வது ஓவரில் நார்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்தின் ஜோ கார்டர், பிரீட் ஹாம்ப்டன் ஜோடி 43 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

43 எப்படி: இவரது முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. ‘நோ–பாலாக’ வீசிய 2வது பந்தில் சிக்சர் விளாசப்பட்டது. பின், மீண்டும் ‘நோ–பாலாக’ வீசப்பட்ட ‘பிரீ ஹிட்’ பந்திலும் சிக்சர் பறக்கவிடப்பட்டது. இரண்டாவது ‘பிரீ ஹிட்’ வாய்ப்பிலும் சிக்சர் அடிக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி 3 பந்திலும் சிக்சர் விளாசப்பட்டது.

புதிய சாதனை: இந்த ஓவரில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி, ஒரு ரன், உதிரியாக 2 ‘நோ–பால்’ ரன் என மொத்தம் 43 ரன் (4, 6+1 நோபால், 6+1 நோபால், 6, 1, 6, 6, 6) கிடைத்தது. இதன்மூலம் ‘லிஸ்ட் ஏ’ போட்டி வரலாற்றில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற புதிய உலக சாதனையானது. இதற்கு முன் வங்கதேசத்தில் நடந்த தாகா பிரிமியர் லீக் தொடரில் அபாஹனி அணிக்கு எதிராக ஷேக் ஜமால் தன்மாண்டி அணிக்காக விளையாடிய ஜிம்பாப்பே வீரர் எல்டன் சிகும்புரா, ஒரு ஓவரில் 39 ரன் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

சர்வதேச அரங்கில் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (எதிர்: நெதர்லாந்து, பவுலர்: டான் வான் பன்ஜ், 2007 உலக கோப்பை, இடம்: செயின்ட் கிட்ஸ்), இந்தியாவின் யுவராஜ் சிங் (எதிர்: இங்கிலாந்து, பவுலர்: ஸ்டூவர்ட் பிராட், 2007 ‘டுவென்டி–20’ உலக கோப்பை, இடம்: டர்பன்) ஆகியோர் ஒரு ஓவரில் தலா 36 ரன் விளாசியது அதிகபட்சமாக உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?