Advertisement


கவுன்டி ஆட்டம்: விஜய் காட்டம்

நவம்பர் 07, 2018.
 Comments  
 


Murali Vijay, Cricket, India, England County Cricket
 

சென்னை: ‘‘இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக கவுன்டி போட்டியில் விளையாடவில்லை. ‘பேட்டிங்’ நுணுக்கத்திலும் மாற்றம் செய்யவில்லை,’’என, துவக்க வீரர் முரளி விஜய் காட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்தவர் முரளி விஜய். சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்டில்(20, 6, 0) சோபிக்காததால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் இங்கிலாந்தின் எசக்ஸ் கவுன்டி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கு ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்தார். இழந்த ‘பார்மை’ மீட்ட விஜய், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான(டிச. 6–ஜன.7) இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த முறை ஆஸ்திரேலிய பயணத்தில் (2014–15), 482 ரன்(சராசரி 60.25) குவித்த இவர், மீண்டும் அசத்த காத்திருக்கிறார்.

முரளி விஜய் கூறியது:

எசக்ஸ் கவுன்டி அணிக்காக விளையாடியது சிறந்த அனுபவம். இங்கு, எனது ஆட்ட நுணுக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. விரும்பிய வகையில் பேட் செய்ய அனுமதித்தனர். மூன்று முக்கிய போட்டிகளில் ரன் சேர்த்தது, தேவையான ஊக்கம் அளித்தது.

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் கவுன்டி போட்டியில் விளையாடவில்லை. சிறப்பான முறையில் ரன் சேர்க்க வேண்டும் என்று உணர்ந்தேன். நினைத்தது போலவே நடந்தது. இது இந்திய அணிக்கு திரும்ப கூடுதல் வாய்ப்பை உருவாக்கி தந்தது எனக் கூறலாம்.

ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பான முறையில் திட்டமிட்டுள்ளோம். முன்னதாகவே ஆஸ்திரேலிய கிளம்புகிறோம். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் சில பயற்சி போட்டிகளிலும் விளையாட உள்ளோம். வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன். இங்கு எனது திறமைக்கு அல்ல, மனவலிமைக்கு தான் சவால்.

ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் ‘சுழலை’ சந்திக்க தயாராக உள்ளேன். இவருக்கு துவக்கத்திலேயே நெருக்கடி கொடுக்க முயற்சிப்பேன்.

இவ்வாறு முரளி விஜய் கூறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?