Advertisement


மீண்டது இங்கிலாந்து அணி

நவம்பர் 06, 2018.
 Comments  
 


Ben Foakes, england cricket
 

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில்போக்ஸ், கர்ரான் கைகொடுக்க இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதிர்ச்சி துவக்கம்

இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. லக்மல் ‘வேகத்தில்’ அறிமுக வீரர் ரோரி பர்ன்ஸ் (9), மொயீன் அலி (0) அவுட்டாகினர்.  தில்ருவன் பெரேரா ‘சுழலில்’ ஜென்னிங்ஸ் (46), ஸ்டோக்ஸ் (7) ஆட்டமிழந்தனர். கேப்டன் ரூட் (35), பட்லர் (38) ஜொலிக்கவில்லை. இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

போக்ஸ் அரை சதம்

அடுத்து இணைந்த அறிமுக வீரர் பென் போக்ஸ், சாம் கர்ரான் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். 7வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தபோது, கர்ரான் (48) அவுட்டானார். போக்ஸ் அரை சதம் அடித்து நம்பிக்கை தந்தார். ரஷித் 35 ரன்களில் ‘பெவிலியன்’ திரும்பினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து இருந்தது. போக்ஸ் (87), லீச் (14) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக பெரேரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?