Advertisement


தங்கம் வென்றார் இளவேனில்

நவம்பர் 06, 2018.
 Comments  
 


Elavenil Valarivan, india, shooting
 

குவைத் சிட்டி: ஆசிய துப்பாக்கி சுடுதல் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் தங்கம் வென்றார்.

குவைத்தில் 11வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது.இதன் கலப்பு இரட்டையர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் இந்தியாவின் இளவேனில்–ஹிரிதே ஜோடி, மெகுலி ஜோஸ்– அர்ஜுன் ஜோடி பங்கேற்றது. தகுதிச்சுற்றில் 835.8 புள்ளிகள் பெற்ற இளவேனில் ஜோடி 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. மெகுலி ஜோடி (833.5) 5வது இடத்துடன் பைனலுக்குள் நுழைந்தது. இதில் அபாரமாக செயல்பட்ட இளவேனில் ஜோடி 502.1 புள்ளியுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தனதாக்கியது. மெகுலி ஜோடி (436.9) வெண்கலம் கைப்பற்றியது. சீனாவின் ஷி மெங்யோ– யெபிங் ஜோடி வெள்ளி வென்றது.

ஆன்கத் சாதனை

ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ பிரிவு பைனலில் இந்திய வீரர் ஆன்கத் விர் சிங் ஜொலித்தார். மொத்தம் 60 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் தங்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம், இப்பிரிவில் கண்டங்கள் மற்றும் சர்வதேச அளவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரரானார்.

பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு பைனலுக்கு இந்தியாவின் இளவேனில், ஸ்ரேயா அகர்வால், மெகுலி ஜோஸ் உள்ளிட்டோர்தகுதி பெற்றனர்.துடிப்பாக செயல்பட்ட இளவேனில் 227.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலம் வென்றார். சக வீராங்கனையான ஸ்ரேயா, மெகுலி முறையே 6, 7வது இடம் பிடித்தனர். தங்கம், வெள்ளி முறையே சீனாவின் ஷி மெங்யோ, செ ஹாங் வென்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?