Advertisement


இந்திய பெண்கள் மீண்டும் வெற்றி: உலக கோப்பை பயிற்சியில் அபாரம்

நவம்பர் 05, 2018.
 Comments  
 


India Women, T20 World Cup Cricket, Practice Match, West Indies Women
 

பார்புடா: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய பெண்கள் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது.

வெஸ்ட் இண்டீசில் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரும் 9ம் தேதி துவங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.இதற்கு தயாராகும் வகையில் இரண்டு பயிற்சி போட்டியில் பங்கேற்றது.

முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற இந்திய பெண்கள் அணி, நேற்று தனது இரண்டாவது போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீசை சந்தித்தது.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹேலே 37 பந்தில் 41 ரன்கள் விளாசி கைகொடுத்தார். பின் இந்திய சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது.

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ‘சீனியர்’ மிதாலி ராஜ் ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஸ்மிருதி மந்தனா 20 பந்தில் 32 ரன்கள் விளாசினார். பின் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட இந்திய அணியின் இலக்கு 12 ஓவரில் 75 ரன்கள் என மாறியது. முடிவில் 11.3 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?